வானிலை செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை

அரபிக்கடலில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சென்னை,

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் கனமழை

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தீபாவளி பண்டிகையான இன்று சென்னையில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், சென்டிரல், கோயம்பேடு உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

SCROLL FOR NEXT