வானிலை செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை

வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சென்னை,

வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னையில் கனமழை

இந்நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாநகர், புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அதன்படி, வடபழனி, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பூந்தமல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.