கனமழை 
வானிலை செய்திகள்

தூத்துக்குடி, திண்டுக்கல், நெல்லை உள்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பருவமழை இந்த ஆண்டு போதிய அளவு பெய்யாமல் போக்கு காட்டி வருகிறது.

குமரிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயல்சீமா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதையும், மேலும் தெற்கு கேரளம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் வடகிழக்கு பருவமழை மீண்டும் பெய்ய தொடங்கி இருக்கிறது.

18 மாவட்டங்களில்

அதன்படி, இன்று (புதன்கிழமை) நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் காற்றுடன் கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கட லூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னல் காற்றுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மிதமான மழை

நாளை (வியாழக்கிழமை) திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ் ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கட லூர்,நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT