சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசுகிறது. இதனால் மதிய வேளைகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் ஜூஸ் கடைகளை நாடிச்செல்வதை காண முடிகிறது. இதற்கிடையே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் 16 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. குறிப்பாக, ஈரோடு மற்றும் வேலூரில் 160 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் விபரம் பின்வருமாறு;
ஈரோடு: 106.52 டிகிரி பாரன்ஹீட்
வேலூர்: 106.34 டிகிரி பாரன்ஹீட்
மீனம்பாக்கம் 105.44 டிகிரி பாரன்ஹீட்
திருத்தணி 104 டிகிரி பாரன்ஹீட்
மதுரை நகரம் 103.64 டிகிரி பாரன்ஹீட்
திருச்சி 103 டிகிரி பாரன்ஹீட்
மதுரை விமானநிலையம் 102.92 டிகிரி பாரன்ஹீட்
நுங்கம்பாக்கம் 102.56 டிகிரி பாரன்ஹீட்
தஞ்சை 102 டிகிரி பாரன்ஹீட்
கடலூர்: 100.22 டிகிரி பாரன்ஹீட்
கரூர் பரமத்தி 102 டிகிரி பாரன்ஹீட்
நாகை: 100.76 டிகிரி பாரன்ஹீட்
நாமக்கல் 100.76 டிகிரி பாரன்ஹீட்
பாளையங்கோட்டை 100 டிகிரி பாரன்ஹீட்
பரங்கிபேட்டை 100 டிகிரி பாரன்ஹீட்
தூத்துக்குடி 100 டிகிரி பாரன்ஹீட்