கோப்புப்படம் 
வானிலை செய்திகள்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது - வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.

சென்னை,

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா-மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 3 நாட்களில் வடக்கு ஒடிசா - வடக்கு சத்தீஸ்கர் நோக்கி மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.