வானிலை செய்திகள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை

சென்னையை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்துள்ளன.

சென்னை,

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. வடபழனி, மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, பல்லாவரம், மதுரவாயல், வானகரம், நெற்குன்றம், வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. சென்னையை சுற்றி கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால், மாலை நேரம், இரவு பொழுதாக காட்சியளிக்கிளது.