வானிலை செய்திகள்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை

நாளை 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து தென் இந்தியாவில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆரஞ்ச அலர்ட்

இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 29 மாவட்டங்களில் கனமழை

இதே போல், தமிழகத்தில் நாளை(15-ந்தேதி) 29 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் 17 மாவட்டங்களில் கனமழை

தொடர்ந்து நாளை மறுநாள்(17-ந்தேதி) 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 18-ந்தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT