வானிலை செய்திகள்

அரபிக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், அதையொட்டிள்ள பகுதிகளில் பரவாலாக பருமமழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த இரு தினங்களாக அனேக இடங்களில் மழை பெய்வதையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும் பதிவாகி வருவதை பார்க்க முடிகிறது

.இதன் தொடர்ச்சியாக இன்றும் தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டியது. இந்த நிலையில் இனி வரும் நாட்களிலும் பருவமழை தீவிரம் அடையும் என தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று தென்மேற்கு அரபிக் கடலில் நாளை மறுதினம் (அக்டோபர் 19-ந்தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தற்போது வளிமண்டல சுழற்சி ஏற்பட்டிருப்பதாகவும், அதன் காரணமாக 19-ந்தேதி அரபிக் கடல் தென்மேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், அதையொட்டிள்ள பகுதிகளில் பரவாலாக பருமமழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT