வானிலை மையம் 
வானிலை செய்திகள்

நெல்லை, கன்னியாகுமரியில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் ரெட் அலர்ட்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி தென்கிழக்கு கடல் பகுதி, கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணியளவில், தென்கிழக்கு அரபிக்கடல் மறும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறி ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி தென்கிழக்கு கடல் பகுதி, கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8.30 மணியளவில், தென்கிழக்கு அரபிக்கடல் மறும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் அதிகனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகனமழை எச்சரிக்கை விடுத்து இருப்பதால், நிர்வாக ரீதியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு நிற எச்சரிக்கையும் வானிலை மையம் விடுத்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை, தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கிருஷ்னகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT