தமிழகத்தில் இன்று தேனி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையான நாளை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.