வானிலை செய்திகள்

20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் அக்வான் புயல் உருவாக உள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

20 மாவட்டங்களில் மழை

இந்த நிலையில், 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT