வானிலை செய்திகள்

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை

சராசரி கடல் மட்டத்தில் மகாராஷ்டிராவிலிருந்து கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில், தமிழகத்தில் காலை 7 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி , கிருஷ்ணகிரி, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், வேலூர் ஆகிய 20 மாவட்டங்களில் காலை 7 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.