வானிலை செய்திகள்

5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

5 மாவட்டங்கள்

இந்த நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன்படி தமிழகத்தின் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூரில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT