வானிலை செய்திகள்

காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்..?

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை,

தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காலை 10 மணி வரை தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.