கோப்புப்படம் 
வானிலை செய்திகள்

23 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. சுமார் 4.5 கி.மீ. உயரத்தில் மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர், சேலம், ஈரோடு, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT