சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பலத்த காற்றுடன் திடீரென மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை, வடபழனி, ஈக்காட்டுதாங்கல், கிண்டி, அண்ணா நகர், திருவான்மியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.