சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆந்திராவின் ராயலசீமா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மே ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரவு பரவலாக மழை பெய்து வருகிறது. தாம்பரம், கிண்டி, பம்மல், வில்லிவாக்கம், வேளச்சேரி, மதுரவாயில், போரூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், துரைப்பாக்கம், ஆவடி, எழும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.