வானிலை செய்திகள்

6 மாவட்டங்களில் மதியம் 12 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மதியம் 12 மணி வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.