சென்னை,
தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று வடகடலோர தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின், ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று மதியம்1 மணி வரை மழை வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.