வானிலை செய்திகள்

11 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

11 மாவட்டங்கள்

இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தின் தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, தென்காசி, நெல்லை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.