சென்னை,
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. சென்னையில் இன்று மாலை முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், பிராட்வே, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, காமராஜர் சாலை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.