வானிலை செய்திகள்

தமிழகத்தின் 7 இடங்களில் சதமடித்த வெயில்

தமிழகத்தின் சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

* திருத்தணி - 104 டிகிரி பாரன்ஹீட்

* சென்னை மீனம்பாக்கம் - 103 டிகிரி பாரன்ஹீட்

* சென்னை நுங்கம்பாக்கம் - 102 டிகிரி பாரன்ஹீட்

* வேலூர் - 101 டிகிரி பாரன்ஹீட்

* திருச்சி 101 டிகிரி பாரன்ஹீட்

* ஈரோடு - 100 டிகிரி பாரன்ஹீட்

* மதுரை விமான நிலையம் - 100 டிகிரி பாரன்ஹீட்