வானிலை செய்திகள்

புயல் எதிரொலி.. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட்

முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

'முரசு' புயல்

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

01.11.2026 (இன்று): திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன (ஆரஞ்ச்அலர்ட்) மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்

02.11.2026 (நாளை): சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கன முதல் மிகக் கன மழை (ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

03.11.2026: நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடக்கு தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT