தென்காசி,
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, தென்காசிஉள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் தென்மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மாலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டி மழையை பார்த்து பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.