சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 9 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
சென்னை நுங்கம்பாக்கம் - 100.4°F
சென்னை மீனம்பாக்கம் - 100.8°F
கடலூர் - 100.4°F
கரூர் பரமத்தி - 100.4°F
மதுரை - 102.6°F
மதுரை விமான நிலையம் - 101.3°F
நாகப்பட்டினம் - 103.8°F
தஞ்சாவூர் - 100.4°F
திருச்சி - 101.7°F
இதனை தவிர, புதுச்சேரியில் 101.3 டிகிரி வெயிலும், காரைக்காலில் 100.6 டிகிரி வெயிலும் பதிவாகி உள்ளது.