சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் இன்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு;
சென்னை நுங்கம்பாக்கம் - 38.8°C = 101.8°F
சென்னை மீனம்பாக்கம் - 38.7°C = 101.7°F
கடலூர் - 38.0°C = 100.4°F
மதுரை - 40.6°C = 105.1°F
மதுரை விமான நிலையம் - 40.6°C = 105.1°F
நாகப்பட்டினம் - 38.2°C = 100.8°F
பாளையங்கோட்டை - 38.2°C = 100.8°F
திருச்சி - 38.7°C = 101.7°F
வேலூர் - 38.6°C = 101.5°F