சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
சென்னை மீனம்பாக்கம் – 104.0°F
ஈரோடு – 100.0°F
கரூர் பரமத்தி – 100.4°F
மதுரை – 100.0°F
மதுரை விமான நிலையம் – 101.3°F
திருச்சி – 104.2°F
திருத்தணி – 104.0°F
வேலூர் – 105.1°F