சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:
ஈரோடு – 100.4°F
கரூர் பரமத்தி – 101.3°F
மதுரை விமான நிலையம் – 102.2°F
நாகப்பட்டினம் – 100.2°F
பாளையங்கோட்டை – 100.6°F
திருச்சி – 103.5°F
திருத்தணி – 100.4°F
வேலூர் – 102.6°F