சென்னை,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும், சில பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
சென்னை நுங்கம்பாக்கம் – 100.2°F
சென்னை மீனம்பாக்கம் – 100.4°F
கடலூர் – 102.2°F
நாகப்பட்டினம் – 100.4°F
பரங்கிப்பேட்டை – 100.0°F
திருத்தணி – 100.6°F
வேலூர் – 102.0°F