சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:
மதுரை – 37.8°C (100.0°F)
மதுரை விமான நிலையம் – 39.0°C (102.2°F)
நாகப்பட்டினம் – 38.2°C (100.8°F)
தஞ்சாவூர் – 38.0°C (100.4°F)
திருச்சி – 39.7°C (103.5°F)
திருத்தணி – 38.1°C (100.6°F)
வேலூர் – 38.1°C (100.6°F)