சென்னை,
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல், கள்ளக்குறிச்சி. சேலம், கோவை, தர்மபுரி, ஈரோடு, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி நீலகிரி, திருவள்ளூர், திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.