வானிலை செய்திகள்

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மாவட்டங்களில் மழை

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

SCROLL FOR NEXT