வானிலை செய்திகள்

தமிழகத்தில் இன்று வெயில் சதம் அடித்த இடம் எது?

இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு இடத்தில் மட்டும் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மதுரை விமான நிலையத்தில் (38°C) - 100.4 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT