உலக செய்திகள்

வங்காளதேசம்: நட்சத்திர ஓட்டலில் தீ விபத்து - 10 பேர் பலி

தீ விபத்தில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

டாக்கா,

வங்காளதேசத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவின் அண்டை நாடு வங்காளதேசம். இந்நாட்டின் சிட்டகாங் மாகாணம் காக்ஸ் மாவட்டத்தில் கடற்கரையோரம் நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

தீ விபத்து - 10 பேர் பலி

இந்த நட்சத்திர ஓட்டலில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஓட்டலில் தங்கி இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT