உலக செய்திகள்

நைஜீரியாவில் போகோஹராம் தாக்குதலில் 18 பேர் பலி

நைஜீரியாவின் போகோ ஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர். #BokoHaramAttack

கனோ,

நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோ ஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது. இந்நிலையில் மயிடுகுரி நகரத்தின் வடகிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 18 பேர் பலியாகினர். மேலும் 84 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மயிடுகுரியில் பகுதியில் நடைபெற்ற இந்த மோசமான தாக்குதலில் பலர் இறந்துள்ளனர். பலேஷூவா மற்றும் பலேகுரா கிராமப்பகுதிகளில் இதுவரை 18 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என அம்மாநில அவசர மேலாண்மை முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்றவர்களே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT