ஜூபா
தெற்கு சூடானில் அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் நாட்டில் வருகிற டிசம்பர் 22-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டில் உள்நாட்டு கலகம் வெடித்துள்ளது. அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்டு உள்ள மோதலில், 23 பேர் பலியாகி உள்ளனர்.
அதிபர் சல்வா கீரின் படைகளுக்கும் மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சாரின் படைகளுக்கும் மற்றும் பழங்குடியினருக்கும் இடையே நீண்ட கால மோதல் தொடர்ந்து வருகிறது. இதில், ருவெங் நகருக்குள் மச்சாரின் படைகளை சேர்ந்த போராளிகள் நுழைந்ததும், மோதல் தொடங்கியுள்ளது.
இதில், அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி கடந்த வாரம் வியாழன் வரையிலான நாட்களில் நடந்த மோதலில் 23 பேர் பலியாகி உள்ளனர். 17 பேர் காயமடைந்தனர். இதனை போலீஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இதனால், ஆயிரக்கணக்கானோர் அந்த பகுதியில் இருந்து தப்பி, பாதுகாப்பு தேடி வேறு பகுதிகளுக்கு ஓடி விட்டனர்.