Image Courtesy : @Whatcomctygov 
உலக செய்திகள்

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து தப்பிய 25 கோடி தேனீக்கள் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

லாரியின் பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தேனீக்கள் தப்பி பறந்து சென்றன.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாண நெடுஞ்சாலையில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. தேனீ பண்ணைக்குச் சொந்தமான அந்த லாரியில் 25 கோடிக்கும் அதிகமான வளர்ப்பு தேனீக்கள் கொண்டு செல்லப்பட்டன. கனடா எல்லையில் உள்ள வாங்டாம் அருகே சென்றபோது அந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது.

இதில் லாரியின் பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த தேனீக்கள் தப்பி பறந்து சென்றன. இதனையடுத்து அந்த சாலை மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் தப்பியோடிய தேனீக்களை மீட்க முயன்று வருகின்றனர். இதன்காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

SCROLL FOR NEXT