உலக செய்திகள்

சுயமாக சாதித்து கோடீஸ்வரியான பெண்களின் போர்ப்ஸ் பட்டியலில் 3 இந்திய பெண்கள்

அமெரிக்காவில் சுயமாக சாதித்து கோடீஸ்வரியான பெண்களின் போர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிகை அமெரிக்காவில் சுயமாக சாதித்து கோடீஸ்வரியான பெண்களின் 21 வயது முதல் 92 வயது வரை உள்ள 80 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த ஜெய்ஸ்ரீ உல்லால் தனது 58-வது வயதில் 140 கோடி டாலர் சொத்துக்களுடன் பட்டியலில் 18-வது இடம் பிடித்துள்ளார்.

வெறும் 2000 டாலர் முதலீட்டுடன் வீட்டிலேயே நிறுவனம் தொடங்கிய சின்டல் நிறுவன துணை நிறுவனர் நீரஜா சேதி 64-வது வயதில் 100 கோடி டாலர் சொத்துக்களுடன் பட்டியலில் 23-ம் இடம் பிடித்துள்ளார். ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி துணை நிறுவனரும் 34 வயதானவருமான நேஹா நர்கெடெ 36 கோடி டாலர் சொத்துக்களுடன் பட்டியலில் 60-ம் இடம் பிடித்துள்ளார்.

பிரபல பாடகர் ரிஹானா 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகின் பணக்கார பெண் இசையமைப்பாளர் என போர்ப்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

SCROLL FOR NEXT