உலக செய்திகள்

33வது ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாடு; ஜின்பிங்-டிரம்ப்-புதின் பங்கேற்பு

அமெரிக்கா - ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம். செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை நடத்தியாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷென்சென்,

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் நகரில், 33-வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சிமாநாடு இன்று (நவம்பர் 19) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் பங்கேற்றனர்.

அமைதியைப் பாதுகாக்க அமெரிக்கா பாடுபடும்

இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்,

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி, நிலைத்தன்மையை மேம்படுத்த தொடர்ந்து செயல்படுவோம். பல நூற்றாண்டுகளாக அமெரிக்கா பசிபிக் பிராந்திய சக்தியாக இருந்து வருகிறது. அமெரிக்க பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இறையாண்மை, செழிப்பு, அமைதியைப் பாதுகாக்க அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும்.

நாங்கள் சீனாவை உளவு பார்க்கிறோம். அவர்களும் எங்களை உளவு பார்க்கிறார்கள். SI (சூப்பர் இன்டலிஜன்ஸ்) துறையை முடக்கும் கட்டுப்பாடுகளை அனுமதிக்க மாட்டோம். சூப்பர் இன்டலிஜன்ஸ் நல்ல அம்சங்களுடன் சில பாதிப்புகளும் உள்ளது என்றார்.

10 ஆண்டுகளில் 60 சதவிதம் உயர்வு

ஆசிய-பசிபிக் மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேசுகையில்,

ஆசிய-பசிபிக் வர்த்தகத்தில் ரஷியா சாதனை அடைத்துள்ளதாகவும், 8 மாதங்களில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் ஆசிய-பசிபிக் நாடுகளுடனான ரஷியாவின் வர்த்தகம் 10 ஆண்டுகளில் 60% உயர்வு பெற்றுளதாகவும் ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

ரஷியாவை முழுமையாக நம்பலாம்

மேலும் "எரிசக்தி அல்லாத துறைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் ரஷ்யா தீவிர கவனம் செலுத்துகிறது. ஆசிய-பசிபிக் நாடுகளின் உணவு மற்றும் எரிசக்திப் பாதுகாப்பை ரஷ்யா உறுதி செய்யும். தடையற்ற எரிசக்தி, உணவு தானியங்கள் மற்றும் உர விநியோகத்தை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என உறுதி அளிக்கிறேன். ரஷியாவின் விநியோகத் தரம் மற்றும் நம்பகத்தன்மையை நட்பு நாடுகள் முழுமையாக நம்பலாம் என்று கூறினார்.

20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி

APEC ஒத்துழைப்பிற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வழங்கப்படும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிரடியாக அறிவித்துள்ளார். தடையற்ற வர்த்தகம் மற்றும் முதலீடுகளே ஆசிய-பசிபிக் வளர்ச்சிக்கு ஒரே வழி என்றும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு வெளிப்படையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். மேலும் "APEC அமைப்பின் நடைமுறை ஒத்துழைப்புக்கு 20 மில்லியன் டாலர் வழங்கப்படும். பசுமை வளர்ச்சி, குறைந்த கார்பன் திட்டங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

அணு ஆயுத ஒப்பந்தம்

சீனாவின் ஷென்சென் நகரில் டிரம்ப் - புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா - ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம். செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிவிகிறது.

முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், 33-வது APEC பொருளாதாரத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

SCROLL FOR NEXT