உலக செய்திகள்

நிலவுக்கு பயணம் மேற்கொண்ட 4 விண்வெளி வீரர்கள் நாளை பூமியில் தரையிறங்குகிறார்கள்

பூமியில் இருந்து 406.771 கி.மீ தொலைவில் பயணம் செய்து நிலவுக்கு மிக அருகில் சென்றனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் விண்வெளிகழகமான நாசா, நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெஸ்மிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 2-ம் தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது. இவர்கள் நிலவை சுற்றி ஆய்வு செய்தனர்.

பூமியில் இருந்து 406.771 கி.மீ தொலைவில் பயணம் செய்து நிலவுக்கு மிக அருகில் சென்றனர். மேலும் நிலவின் பின்புறத்தை நேரில் பார்த்தவர்கள் என்ற சாதனையையும் படைத்தனர்.

ஆய்வுகளை முடித்து கொண்டு ஓரியன் விண்கலத்தில் 4 விண்வெளி வீரர்களும் பூமியை நோக்கி புறப்பட்டனர். அவர்கள் பயணிக்கும் ஒரியன் விண்கலம் நாளை பூமியில் தரையிறங்குகிறது. இந்திய நேரப்படி நாளை காலை 5.37 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் சான் டியாகோ கடற்கரை பகுதியில் தரையிறங்குவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT