காபூல்
ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள ஷஷ்தாராக் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த தாக்குதலில் பல பத்திரிகையாளர்களும் படுகாயம் அடைந்து உள்ளனர். உளவுத்துறையின் கட்டடங்களுக்கு அருகில் ஷஷ்தாராக் பகுதியில் இந்த வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
நகரத்தின் மேற்கு பகுதியில் ஒரு வாக்காளர் பதிவு மையத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் 60 பேர் பலியானார்கள்.
காபூல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் இது தற்கொலைபடை குண்டுவெடிப்பு என்பதை உறுதி செய்தார், ஆனால் இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.