உலக செய்திகள்

பெருவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் 6 பேர் பலி

இவை ரிக்டர் அளவில் 5.1 மற்றும் 3.7 ஆகப் பதிவாகின.

லிமா,

தென் அமெரிக்க நாடான பெருவின் ஜூனின் பிராந்தியத்தில் உள்ள சுபாகா மாகாணத்தில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அளவில் 5.1 மற்றும் 3.7 ஆகப் பதிவாகின. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் மண் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட 48-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. மேலும் 18 வீடுகள் பலத்த சேதம டைந்தன. இதனால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு வரும் வேளையில், இடிபாடுகளுக்குள் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என மீட்புக்குழுவினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.