உலக செய்திகள்

பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்த 6 வயது சிறுமி

‘ராபா உலக சாதனை புத்தகத்தில்‘ இச்சாதனை பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமிக்கு “உலக நாட்டிய இளவரசி" என்ற மகுடம் சூட்டி கௌரவிக்கப்பட்டது.

இலங்கை,

இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்த கவிஞர் ரஜீவனின் மகளான 6 வயது சிறுமி ரஜீவன் கம்சத்வனி இரண்டரை மணி நேரம் தொடர்ச்சியாக பரதநாட்டியம் ஆடி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக நாட்டிய இளவரசி

‘ராபா உலக சாதனை புத்தகத்தில்‘ இச்சாதனை பதிவு செய்யப்பட்ட நிலையில், சிறுமிக்கு “உலக நாட்டிய இளவரசி" என்ற மகுடம் சூட்டி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை நாட்டுத் தூதுவர் கலாநிதி யோகதாசன் யூட் நிமலன், ராபா உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட தலைவர் கலாநிதி சிவனேஸ்வரன் விஜிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.