சுவா,
பிஜி தீவின் பிராந்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலநடுக்க பாதிப்பு மிகுந்த நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவு அமைந்திருக்கிறது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களுடன் எரிமலை சீற்றமும் ஏற்படுகிறது
அட்ச ரேகையில் இருந்து 21.8295 டிகிரி அளவிலும், தீர்க்க ரேகையில் இருந்து 179.36 டிகிரி அளவிலும் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை.