உலக செய்திகள்

இந்தோனேஷியா நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. #Indonesia #Earthquake

சிங்கப்பூர்,

இந்தோனேஷியாவில் கிழக்கு மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் பற்றி உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இது கிழக்கு நூசா தெங்ஜரா மாகாணத்தின் தலைநகரான குபங்கில் இருந்து 100 கிமீ தென்கிழக்காக 10 கிமீ ஆழத்தில் தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT