உலக செய்திகள்

300 பேர் கொண்ட கனடா வர்த்தக குழு இந்தியா வருகிறது

இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இந்த பயணத்தை குழு மேற்கொள்கிறது.

ஒட்டாவா,

இந்தியாவுக்கு 300 வர்த்தக பிரதிநிதிகளை கொண்ட குழுவை கனடா நாளை (திங்கட்கிழமை) அனுப்பி வைக்கிறது. கனடாவின் சர்வதேச வர்த்தக மந்திரி மனிந்தர் சித்து தலைமையில் இக்குழு இந்தியாவுக்கு வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் இது தான் மிகப்பெரிய வர்த்தக பயணம் ஆகும். 12-ந் தேதி முதல் 17-ந் தேதிவரை மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இக்குழு பயணம் செய்கிறது. வர்த்தக உறவை விரிவுபடுத்தவும், 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்கவும் இந்த பயணத்தை மேற்கொள்கிறது.

SCROLL FOR NEXT