உலக செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

ஈரான் நாட்டின் புஷேர் அணு மின் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெஹ்ரான்,

ஈரான் நாட்டின் புஷேர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. புஷேர் பகுதியில் உள்ள அணு மின் நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.