உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ்: கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம் - மீட்பு பணிகள் தீவிரம்

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ்.

மணாலி,

தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் பம்பங்கா மாகாணம் ஏஞ்சல்ஸ் நகரில் பரங்கெ பலிபஹொ பகுதியில் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை வழக்கமான கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 22 தொழிலாளர்களை லேசான காயங்களுடன் மீட்டனர். ஆனாலும், இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.