பீஜிங்,
சீனாவில் யுன்னான் மாகாணம் ஹுசி நகரின் பைஹு கிராமத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வந்தது.
இந்த சுரங்கத்தில் இன்று அதிகாலை 6 தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுத்துக்கொண்டிருந்த 6 தொழிலாளர்களும் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், சுரங்கத்திற்குள் சிக்கிய ஒரு தொழிலாளி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, 5 தொழிலாளர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.