அணில் குரங்கு குட்டி 
உலக செய்திகள்

சான்டியாகோ மிருகக்காட்சிசாலையில் அரிய வகை அணில் குரங்கு குட்டி பிறந்தது!

பிறந்தது முதல் இந்தக்குட்டி தனது தாயின் முதுகில் கெட்டியாகப் தொற்றிக்கொண்டு, பாதுகாப்பாக உலா வருகிறது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டியாகோ மிருகக்காட்சிசாலையில் மிகவும் அரிய வகையான கயானன் அணில் குரங்கு குட்டி ஒன்று பிறந்துள்ளது.

புதிய வரவு -பெற்றோர்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டியாகோ மிருகக்காட்சிசாலை அமைந்துள்ளது. இதில் பல விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி அன்று மிருகக்காட்சிசாலையில் உள்ள 'ராக்கெட்' என்ற அரிய வகையான கயானன் அணில் பெண் குரங்கிற்கும், 'ஜின்க்ஸ்' என்ற அணில் ஆண் குரங்கிற்கும் கயானன் அணில் குரங்கு குட்டி ஒன்று பிறந்துள்ளது.

குட்டியின் நிலை-பாலினம்

வனவிலங்கு மருத்துவக் குழுவினர் இந்த குட்டியைத் தூரத்திலிருந்தே கண்காணித்து வருகின்றனர். குட்டி மிகவும் ஆரோக்கியமாக உள்ள போதிலும், அதன் பாலினம் (ஆணா அல்லது பெண்ணா என்பது) இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. பிறந்தது முதல் இந்தக்குட்டி தனது தாயின் முதுகில் கெட்டியாகப் தொற்றிக்கொண்டு, பாதுகாப்பாக உலா வருகிறது.

இயற்கை வாழ்விடமும் அச்சுறுத்தலும்

கயானன் அணில் குரங்குகள் பொதுவாக தென் அமெரிக்காவின் கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானா மற்றும் வடக்கு பிரேசில் போன்ற அடர்ந்த வெப்பமண்டலக் காடுகளை தாயகமாகக் கொண்டவை. காடழிப்பு, மனித ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத வேட்டையாடுதல் காரணமாக இந்த இனம் தங்களின் இயற்கை வாழ்விடங்களை இழந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

பார்வையாளர்கள் வரவேற்பு

இந்த குட்டி குரங்கு, சான்டியாகோ பூங்காவின் 'வைல்டுலைப் எக்ஸப்ளோரர்ஸ் பேஸ்கேம்ப்' பகுதியில் தாயுடன் வசித்து வருகிறது. இந்த அழகான குட்டியைக் காண்பதற்கும், அதன் சுட்டித்தனமான செயல்களை ரசிப்பதற்கும் மிருகக்காட்சிசாலைக்கு பொதுமக்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் பெருமளவில் வருகை தந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT